A.K.M. Ramzy / 2021 ஜூலை 26 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:
டெல்லி வந்திருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்திருந்தார். அப்போது, மறைந்த கலைஞர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் பாராட்டி பேசினாராம் ஜனாதிபதி.'
இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டபோது, 'உங்கள் தந்தையின் எழுத்துக்களைப் பற்றி பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். தலித் மக்களுக்கு அதிக அளவில் உதவியிருக்கிறாராமே. அவர் எழுதிய புத்தகங்களை படிக்க விரும்புகிறேன்' என சொன்னாராம்
'கருணாநிதி எழுதிய புத்தகங்கள் தமிழில் தான் உள்ளன; ஆங்கிலத்தில் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்' என, முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டாராம் ஜனாதிபதி. உடனே டி.ஆர். பாலு மற்றும் சிவாவிடம், 'கருணாநிதியின் புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருக்கிறதா என தேடுங்கள்; கிடைத்தால் உடனே ஜனாதிபதியிடம் கொடுத்து விடுங்கள்' என உத்தரவிட்டாராம் முதலமைச்சர்.
எப்படியோ தேடி கருணாநிதியின் கட்டுரைகள் அடங்கிய ஆங்கில புத்தகத்தைக் கண்டுபிடித்துள்ளனர் சிவாவும், பாலுவும். இந்த புத்தகம் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் நன்றி தெரிவித்தாராம்.
36 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
9 hours ago