2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பியூட்டியான ‘பாட்டி’ திருமண மோசடி

Editorial   / 2022 ஜூலை 04 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரக் குழந்தைகளைப் பெற்ற “பாட்டி” பியூட்சி வேஷம் போட்டு, இரண்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்தி, நகை, பணம் உள்ளிட்ட சொத்துக்களை மோசடி செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.

இளம் தோற்றத்துடன் ஆண்களை வலைக்குள் வீழ்ந்திய அந்த பாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தன்னுடைய மனைவியே தனக்குத் துணையென தெரிவித்துள்ள முதலாவது கணவன், அவள் திரும்பிவந்தால் ஏற்றுக்கொண்டு, அறிவுரை கூறுவேன் எனக் கூறியுள்ளார்.

54 வயதான பெண்னே இவ்வாறு திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளார். நகை பணம் மற்றும் சொத்துக்காக, விவாகரத்தான ஆண்களை கல்யாண புரோக்கர் மூலம்  குறிவைத்து முதலாவது திருமணத்தை மறைத்து 2 திருமணங்களை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மறுமணம் செய்துகொள்வதற்காக ஆறு வருடங்களாக பெண்ணைத் ​தேடித்கொண்டிருந்த குடும்பத்தார் பெண்பார்க்க ஆந்திராவுக்கு வருவதை அறிந்த  அப்பெண் பியூட்டி பார்லர் சென்று முடியை (HAIR STRAIGHTING) செய்து மேக்கப்  போட்டு  35 வயதான இளம் தோற்றத்துடன் மாப்பிள்ளை வீட்டார் முன் தோன்றியுள்ளார். அவரது அழகில் மயங்கிய  மாப்பிள்ளை வீட்டுக்கு பெண்ணை பிடித்து போய் உள்ளது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் மாப்பிளை வீட்டாரின் செலவில்  திருநின்றவூரில் திருமணம் நடந்துள்ளது.

 திருமணம் முடிந்த சில நாட்களிலேயே,  மாத வருமானம் தன்னிடம் தான் கொடுக்க வேண்டும், வீட்டின் பீரோ சாவி தன்னிடம் கொடுக்க வேண்டும் என சொல்லி சண்டையிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து தினமும் கணவரிடம் அவரது பெயரில் உள்ள  சொத்துக்களை தனது பெயரில் எழுதி தர வேண்டுமென  அடம்பிடித்துள்ளார் அதன்பின்னர் மேற்கொண்ட விசாரணையில் தாம் ஏமாற்றப்பட்டோம் என மாப்பிள்ளை வீட்டார் புரிந்துகொண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனையடுத்தே அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .