2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

கிரிவன்எலிய கிராம மக்கள் அச்சத்தில்

R.Maheshwary   / 2022 ஜூன் 29 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்‌ஷ

நோர்ட்ன் பிரிட்ஜ் ஏழு கன்னியர் மலைத்தொடரை அண்மித்த காட்டில்  உள்ள சிறுத்தைகள் இரவில் கிராமத்துக்கு வருவதால் கிரிவன்எலிய கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த கிரிவன்எலிய கிராமத்தில் உள்ள வளர்ப்பு நாய்கள் பல காணாமல் போவதாகவும் இரவில் கிராமத்துக்கு வரும் சிறுத்தைகளே நாய்களை வேட்டையாடிச் செல்வதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய குறித்த கிராமத்தில் வீடொன்றில் வளர்க்கப்படும் இரண்டு நாய்களை நேற்று (28) இரவு பத்து மணியளவில்,  வேட்டையாட முயற்சிக்கும்  காட்சியானது,அங்கு பொறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

குறித்த வீட்டைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதால், நாய்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இரவில் கிராமத்தை நோக்கி வரும் சிறுத்தைகளை காட்டுக்குள் துரத்தும் நடவடிக்கைகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிரிவன்எலிய கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .