Ilango Bharathy / 2023 மார்ச் 23 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடகாவில் காங்கிரஸின் ஆட்சி அமைந்தால் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது , டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விரைவில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெலகாவியில் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 10 கிலோகிராம் இலவச அரிசி வழங்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளையும் வெளியிட்டார்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025