2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

முகக்கவசம் கட்டாயமானது

Freelancer   / 2022 ஜூலை 05 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் சென்னையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டுமென சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது. 

வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென சென்னை மாநாகராட்சி கூறியுள்ளது. 

மேலும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணிக்கடைகளில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநகராட்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .