Ilango Bharathy / 2023 மே 16 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளன்று இனிப்பு பொங்கல் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு ஏற்கெனவே, முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரது பிறந்தநாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

அதே போன்று, கருணாநிதி பிறந்தநாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார்.
அதன்படி, அரசமற்றும் அரச உதவிபெறும் பாடசாலை மாணவர்களுக்கு ஜூன் 3ஆம் திகதியன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago