Freelancer / 2023 ஜனவரி 27 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட முள்ளியவளை பொதுச் சந்தையில், நேற்று (26) விற்பனையான மாட்டிறைச்சியில் புழு காணப்பட்டது.
முள்ளியவளை சந்தையில், இறைச்சி வாங்கிய ஒருவர், இறைச்சியில் புழு இருப்பதைக் கண்டுள்ளார்.
குறித்த நபர் பிரதேச சபை தவிசாளர், மற்றும் பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்டவர்களை அழைத்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றவர்கள், குறித்த வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதிகளை மீறி, அதிகளவான மாடுகள் கொல்லப்பட்டு, சந்தைகளில் இறைச்சி விற்பனையாகின்றமையே இதற்குக் காரணம் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை, தண்ணீர் ஊற்று சந்தையிலும் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுவரப்பட்ட மாட்டிறைச்சி அழிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago