Editorial / 2021 நவம்பர் 23 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற ஏ.எல்.எம்.முக்தாரின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் வைபவம், வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்றது.
வலயக் கல்வி அலுவலக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில், வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரின் சுமார் 35 வருட கால கல்வித்துறைக்கான உன்னத சேவைகள் பற்றி அதிகாரிகள் பலரும் பாராட்டிப் பேசியதுடன், நினைவுச் சின்னம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்.
30 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
23 Nov 2025
23 Nov 2025