2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

பிளீச்சிங் பவூடரை உண்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 14 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமியொருவர் பிளீச்சிங் பவுடர் (வெளிற்றும் தூள்) என்று தெரியாமல், அதை  உட்கொண்ட விபரீத சம்பவம் அண்மையில் தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

செங்கோட்டை, மேலூரைச் சேர்ந்த ஐந்து வயதான குறித்த சிறுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிளிச்சிங் பவுடர் தெரியாமல் உட்கொண்டுள்ளார். இதனால் அவர் உடல் இழைத்து, எலும்புகள் தெரியும் அளவிற்கு மெல்லிய தோற்றத்துடன் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்.

இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவரொருவர் குறித்த சிறுமிக்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, "குழந்தையின் உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைக்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

உயர்தர சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் மதுரையில் செய்யப்பட்டு வருகிறது. அவருக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக உள்ளோம்" எனத் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .