2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

மண்சரிவால் ஒன்பது பேர் பலியானர்

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 26 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கின்னாவூர்

ஹிமாச்சல பிரதேசத்தில் மலைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்  அகப்பட்டு  ஒன்பது பேர் பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் சாங்லா மலைப்பிரதேசத்தில் நேற்று சுற்றுலா பயணிகள்  குவிந்து காணப்பட்டனர்.  அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டு மலைப்பகுதியில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு வந்தன. மேகமூட்டமாக இருந்ததால் கீழே பாலத்தில் நின்றிருந்த பயணிகளுக்குத் தெரியவில்லை.

பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது பாறைகள் விழுந்தன. இதேவேளை,ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஒன்பது பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மூன்று பேரை பொலிஸார்  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் இழப்பீடும் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .