2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

மண்சரிவால் இதுவரை 18பேர் மரணம்

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை:

 மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வரும் கனமழை காரணமாக சுவர் இடிந்தும், மண் சரிந்துவிழுந்த சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.  சிலர் காயமடைந்துள்ளனர்.  

மும்பையில், பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில், செம்பூர் பகுதியில் உள்ள பரத் நகரில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

விக்ரோலி பகுதியில்,இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதில் 5 குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். பந்தப் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .