2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி மீட்பு

Freelancer   / 2023 மே 03 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

கடந்த முதலாம்  திகதி பசறை ஆக்கரத்தனை விசேட அதிரடிப் படையினரால் துப்பாக்கி ஒன்றும் 9 தோட்டாக்களும்  மீட்கப்பட்டன.

சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கிரியகல ஆக்கரத்தனை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர். கைது செய்த நபரையும் துப்பாக்கி மற்றும் தோட்டா ஆகியவற்றை பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பசறை பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நேற்றைய தினம் பதுளை நீதவானிடம் ஆஜர் படுத்தினர். நீதவான் சந்தேக நபரை 14நட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர் இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கு அமைவாக பசறை ஆக்கரத்தனை விசேட அதிரடிப் படையினர் இன்றும் மேற் குறிப்பிட்ட சந்தேக நபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது மேலும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

துப்பாக்கி பசறை பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X