2022 ஜூலை 02, சனிக்கிழமை

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த யுவதி

Freelancer   / 2022 மே 14 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை நகரில் இயங்கும் உணவகம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த யுவதி ஒருவர்  பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (14) காலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த யுவதி உணவகத்தின் மூன்றாவது மாடியில் தொழில் ஆரம்பித்த சில மணி நேரத்தில் ஜன்னல் வழியாக பாய்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .