மாவனெல்ல தெவனகல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததில், நால்வர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.

கடந்த சில நாள்களாக பெய்த அடைமழையின் காரணமாகவே இந்த மண்திட்டு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

மண்ணுக்குள் தந்தை, தாய், மகன், மற்றுமொருவர் புதையுண்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மண்ணுக்குள் புதையுண்டிருப்பவர்களே தேடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.