2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

சிவசங்கர் பாபாவுக்கு திடீர் சுகயீனம்

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 25 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

நெஞ்சு வலி காரணமாக, சிவசங்கர் பாபா, ஸ்டான்லி அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பாடசாலையின் நிறுவனர் சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மீது, மூன்று மாணவியர் பாலியல் புகார் அளித்தனர். அதனால், 'போக்சோ' உள்ளிட்ட சில பிரிவுகளில், இரு வழக்குகள் பதியப்பட்டன. சி.பி.சி.ஐ.டி., பொலிஸார், சிவசங்கர் பாபாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், புழல் சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, ஸ்டான்லி அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவரது உடல்நிலை குறித்து, டொக்டர்கள் கூறுகையில், 'வயது மூப்பின் காரணமாக, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார். அவருக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. ' என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .