Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 10 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இளைய மகள் சௌந்தர்யா தயாரிப்பாளர், இயக்குனர் எனப் பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருகிறார்.
இவர் அவரின் தந்தையை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி இருந்தார்என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் இருக்கும் கல்லூரிக்கு சென்றேன்.
அப்பொழுது எனது காரின் மற்றொரு சாவி பவுச்சுடன் காணாமல் போனது. அதனால் அதை தயவு செய்து கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, போயஸ்கார்டனில் வீட்டில் இருந்த லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago