2023 ஜூன் 01, வியாழக்கிழமை

திடீரெனத் தென்பட்ட `லிங்க முத்திரைக் கல்`

Ilango Bharathy   / 2023 மார்ச் 14 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குந்தாப்புரா அருகே பூங்காவில் 400 ஆண்டுகள் பழமையான லிங்க முத்திரை கல் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா பஸ்ரூர் கிராமத்தில் அசோகா பூங்கா உள்ளது. இப்பூங்காவைச் சீரமைக்கும் பணியானது அண்மையில் நடைபெற்றபோது அங்கு பழங்கால கல் ஒன்று இருப்பது தெரியவந்தது.

அக்கல்லில் சூரியன், சந்திரன், சிவலிங்க முத்திரை, நந்தி உள்ளிட்ட வடிவங்கள் இருந்தன. இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அக் கல்லானது  400 ஆண்டுகள் பழமையான லிங்க முத்திரை கல் என்பது தெரியவந்தது. ஆனால் எந்த மன்னர் காலத்து கல் என்பது தெரியவில்லை. இதையடுத்து தொல்லியல் துறை அதிகாரிகள் அக் கல்லை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .