2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 10 பேருக்கு தொற்று

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட முன்பள்ளி ஒன்றின் ஆசிரியை ஒருவர் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றும் 10 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதம் 21ஆம் திகதி முன்பள்ளிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால்,  கொட்டகலை பிரதேச்சபைக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் 57 பேருக்கு நேற்று முன்தினம் (15) பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய, 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள், தத்தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .