Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூலை 22 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் கொரோனா ஊரடங்குக் காலம் தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு, உரிமை, இணைய சுதந்திரம் ஆகியனவற்றைப் பாதுகாக்கும் வகையில் பிங்க் ப்ரொடக்சன் (Pink Protection )என்ற திட்டத்தைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார்.
இதற்காக 10 கார்கள், 40 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 20 சைக்கிள்களைப் பொலிஸாருக்கு முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். இச் சிறப்புப் படையானது வீதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெண்கள் தைரியமாகப் பொலிஸாரிடம் தாம் எதிர் நோக்கும் இன்னல்களை தெரிவிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இது குறித்து முதல்வர் பினராயி விஜயன், "இந்தப் புதிய திட்டத்தின்படி பொலிஸார் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குடும்ப வன்முறை தொடர்பான தகவல்களைப் பெறுவர்.
இக்குழுவில் உள்ள அதிகாரிகள் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் பேசி அவர்கள் பகுதியில் ஏதேனும் குடும்ப வன்முறை பிரச்சினைகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிவர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .