Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 27 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை, கிளாலி, வேம்பெடுகேனி போன்று வெடிபொருள் ஆபத்தான பிரதேசங்களில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளால், நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதில் நெருக்கடி நிலை காணப்படுவதாக பூநகரி பிரதேச செயலாளர் எஸ். கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் குறித்த பகுதிகளுக்குள் சென்ற பலர் உயிரிழந்ததுடன் உடல் அவயவங்களையும் இழந்துள்ளனர். அத்துடன் பெருமளவான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இவ்வாறான பிரதேசங்களில், தற்போது தொடர்சியாக மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதனால், குறித்த பகுதிகளிலுள்ள வீதிகள் சேதமடைந்து வருவதுடன், கடல் நீர் உட்புகும் அபாயமும் காணப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் எஸ். கிருஸ்ணேந்திரன் தெரிவிக்கையில், குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மிதிவடிகள், வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தும் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த மணல் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
மிதிவெடிகள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இருக்கின்ற எச்சரிக்கை அடையாளக் குறியீடுகளை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகிறது என கண்ணிவெடிகளை அகற்றும் தொண்டு நிறுவனங்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago