2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

சேவலுக்கு கேக் வெட்டி பிறந்தநாள்

Editorial   / 2022 ஜனவரி 04 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமலை:

 தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு உறுப்பினராக சேவலை வளர்த்து வருகின்றனர்.

அந்த சேவலுக்கு ‘சின்னு’ என்றும் பெயரிட்டுள்ளனர். இந்த சேவலுக்கு 2ம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.

அப்போது, உறவினர்கள் மற்றும் நண்பர்களை  வீட்டிற்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் சேவலுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

இதற்காக அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் கத்தியை  சேவலின் கால்களில் பிடிக்க வைத்து கேக்கை கட் செய்தனர். பின்னர், அந்த கேக்கை சேவலுக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.

இதைத்தொடர்ந்து, உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். (நன்றி: தினகரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .