Niroshini / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - முரசுமோட்டை சேற்றுக்கண்டிப் பகுதியில், இன்று (01) பிற்பகல், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு (பட்டாக்கத்தி) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன், இதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
9 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
28 Oct 2025