2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சைவசமயம் போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Freelancer   / 2022 நவம்பர் 24 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லை

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் 60ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், திறந்த மட்ட போட்டியாளர்கள் (18-30வயது) ஆகியோர் மத்தியில் நான்கு மாகாணங்களில் சைவ சமயம் சார்பான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.  

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பண்ணிசை, தொண்டுபாடும் செயன்முறை,  புராண படனம், கதாப்பிரசங்கம், மிருதங்கம், வில்லுப்பாட்டு ஆகிய போட்டிகளும் திறந்த மட்டப் போட்டிகளாக புராண படனம், கதாப் பிரசங்கம், மிருதங்கம், வில்லுப்பாட்டு, மேடை நாடகம் ஆகிய போட்டிகளையும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

போட்டிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள் எதிர்வரும் 30/11/2022 முன்பாக தமது விண்ணப்பங்களை saivappulavarsangam1960@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது சைவப்புலவர் சி.கா கமலநாதன், தலைவர், அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், இல 610 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .