2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது

Freelancer   / 2022 ஜூலை 07 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு மீது பன்னீர்செல்வம் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு 'நாங்கள் எப்படி தலையிட முடியும்' என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனையடுத்து, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகே, அ.தி.மு.க பொதுக்குழு நடக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

ஜூன் 23ஆம் திகதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்கு (06) விசாரணைக்கு வந்தது.

அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், 'நிர்வாகிகளின் ஆதரவை பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும். ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் குறிப்பிட்ட எல்லை வரை தான் உயர்நீதிமன்றம் தலையிட முடியும்' என்றார்.

ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் அளிக்கும் தீர்மானங்களை மட்டும் தான் பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியும். உச்சநீதிமன்ற வழக்கால் உயர்நீதிமன்ற வழக்கின் விசாரணை பாதிக்கப்பட கூடாது' என்றார்.

நீதிபதிகள் கூறுகையில், 'ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்ட முடியாது. அதிமுக கட்சி விவகாரங்கள், நட்போ சண்டையோ உங்களுக்குள் நீங்களே பார்த்து கொள்ளுங்கள். நீதிமன்றத்தில் விவாதிக்காதீர்கள். அதிமுகவின் பொதுக்குழுவுக்கு எங்களால் தடை விதிக்க முடியாது' என்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .