2023 ஜூன் 01, வியாழக்கிழமை

”முதலிரவு நடக்கவில்லை” மணமகன் எடுத்த கொடூர முடிவு

Ilango Bharathy   / 2023 மார்ச் 19 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சிந்துல நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், தெலுங்கானாவின் வனபாத்தியைச் சேர்ந்த ருக்மணி (வயது 20) என்பவருக்கும் கடந்த 1ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருமணத்தன்று இரவு ருக்மணியின் வீட்டில் புதுமணத் தம்பதிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு செய்யப்பட்டிருந்தபோது, சரவணனுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாததால் அன்று முதலிரவு நடக்கவில்லை.

அடுத்தடுத்த நாட்களிலும் இதே நிலையே நீடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ருக்மணி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ள நிலையில்  இத்தகவலானது  அந்த ஊர் முழுவதும் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள்  அவருக்கு ஆண்மை இல்லையா? எனக் கேலி செய்து வந்துள்ளதுடன், இதன் ஒருபடியாக அவரை தனியார் வைத்தியசாலையொன்றுக்கு அழைத்துச்சென்று ஆண்மை பரிசோதனை செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மனஉளைச்சலுக்குள்ளான அவர் இது குறித்து தனது தந்தையிடம் தெரியப்படுத்தியதையடுத்து, ஆத்திரமடைந்த அவரது தந்தை   தனது மருமகளின் குடும்பத்தினரைத்  தீர்த்துக்கட்ட முடிவுசெய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ருக்மணியையும், அவரது பெற்றோரையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்த சரவணன், தனது தந்தையுடன் இணைந்து அவர்களை கத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலில் ருக்மணியும் அவரது தாயாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த ருக்மணியின் தந்தை அங்கிருந்து தப்பியோடி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சரவணனையும் அவரது தந்தையையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .