2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

இல்லாமல் செய்யும் முயற்சிகளை நிறுத்தவும்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

காதி நீதிமன்றங்களை முழுமையாக இல்லாமல் செய்து, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சில பிரிவுகளை நீக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சியானது, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

இது குறித்து நேற்று (19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தனித்துவ அடையாளத்துடன் காணப்படும், முஸ்லிம் தனியார் சட்டத்தினை இல்லாதெழிப்பதற்கும், அதில் மாற்றங்களைச் செய்வதற்கும் பல்வேறு காய்நகர்த்தல்கள் இடம்பெற்று வருகிறன.

“அந்த வகையில், தற்போது காதி நீதிமன்ற முறையை இல்லாமல் செய்வதற்கும், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சில பிரிவுகளை நீக்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

“காதி நீதிமன்ற நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் காணப்படுகின்ற போதும், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள் இணக்கம் தெரிவித்து, தங்களது பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தனர். 

“அதன் பிரகாரம், கடந்தகால அரசாங்கங்கள் இந்த விடயத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக சில குழுக்களை அமைத்த போதும் எதுவுமே நடைபெறவில்லை.

“ஏறாவூர் நகர சபையின் கடந்த அமர்வின் போது முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி, பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளேன். இது தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்றி, அதனை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சருக்கும் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .