Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 21 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம்.றொசாந்த்
மாகாண பாடசாலைகளை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக, வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவரது யாழ்ப்பாணம் அலுவலகத்தில், இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்போதுள்ள அரசாங்கமானது மாகாணங்களுக்கே உரித்தான கல்வி, சுகாதார போன்ற விடயங்களை, மாகாணங்களுக்கான அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றதெனச் சாடினார்.
அதற்கு சிலர் துணை போகிறார்கள் எனத் தெரிவித்த அவர், சில மாயைகளை நம்பி சிலர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு தாரைவார்க்கும் முகமாக செயற்படுகின்றார்கள் எனவும் கூறினார்.
ஆனால், தற்போதுள்ள அரசாங்கமானது 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்ட கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை தனது ஆளுகைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில், தாம் செவ்வாய்க்கிழமை (20) கல்வியலாளர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு; ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளதாக, விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அதாவது, 'மாகாணத்துக்கு உட்பட்ட பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளை, மத்தி தனது ஆளுகைக்குட்படுத்தப்படுவதற்கு எதிராக வெகுவிரைவில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யவதென தீர்மானித்துள்ளோம்' என்றார்.
23 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
57 minute ago
2 hours ago