2026 மார்ச் 25, புதன்கிழமை

எரிபொருள் ​ பவுசருடன் வர்த்தகர் கைது

Editorial   / 2026 மார்ச் 25 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

  பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில், சட்டவிரோதமான முறையில் எரிபொருள் பவுசர் ஒன்றையும் அதிகளவிலான எரிபொருளையும் தன்வசம் வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் வலனை ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினரால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மொரகஹஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து  6,752 லீற்றர் டீசல் பெட்ரோல் என்பன  பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வலனை ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையின் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்கவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புலனாய்வு அதிகாரிகளை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட நீண்டகால கண்காணிப்பின் பின்னரே, சந்தேகநபர் மற்றும் எரிபொருள் பவுசர் என்பன கோணபொல பகுதியில் வைத்து அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட எரிபொருள் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .