Princiya Dixci / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓர் அங்கமாக "இல்லத்து வழக்காடு" எனும் தலைப்பில், வெளியீட்டாளரும் திட்டப்பணிப்பாளருமான ஏ.ஜெ. காமில் இம்டாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக வெளியீடு, காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13) நடைபெற்றது .
இந்த நிகழ்வில், காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புத்தகத்தை வெளியீட்டு வைத்தார்.
மேலும், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.பாத்தீபன், கணக்காளர் ஜயசர்மிகா, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேக்கா எதிரிசிங்க, காரைதீவு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிட்டா உட்பட மாதர் அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .
ஆசிய நிலையத்தின் அனுசரணையுடன் GAFSO நிறுவனத்தால் பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026