2023 மே 30, செவ்வாய்க்கிழமை

வருடாந்த போனஸ் கேட்டு ​போராட்டம்

Freelancer   / 2023 மார்ச் 28 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன்- வட்டவளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள், வருடாந்தம் வழங்கப்படும் போனஸை கேட்டு, இன்று (28) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வேலை நிறுத்தமும் செய்தனர்.

நீச்சல் உடை தயாரிக்கும் இந்த ஆடைத் தொழிற்சாலையில் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். வருடாந்தம் தங்களுக்கு வழங்கப்படும் 24 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கவேண்டும் என வலியுறுத்தியே மேற்படி போராட்டத்தில் குதித்திருந்தனர்.

ஆடைக் கைத்தொழில் காலைக்கு உள்ளேயும் வெளியேயும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆடைத்தொழிற்சாலையில் வருடக்கணக்கில் போனஸ் வழங்கப்பட்டது. கொவிட்-19 காலப்பகுதியில் மட்டுமே வழங்கப்படவில்லை என்று ​ ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலைமையை அடுத்து ஏற்பட்ட வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவதற்கு, ஆடைத்தொழிற்சாலையில் வழங்கப்படும் சம்பளம் போதுமானது அல்ல.  எதிர்வரும் சிங்கள-தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தங்களுக்கு உரிய போனஸை வழங்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, ஆடை கைத்தொழில்சாலைக்கு கிடைத்துள்ள ​ஓடர்கள் குறைவாகும். ஆகையால், வருடாந்தம் வழங்கப்படும் போனஸ் தொகையை இம்முறை வழங்கமுடியாது. எனினும், தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஊழியர் ஒருவருக்கு 7,500 ரூபாயை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆடைத்தொழிற்சாலையின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .