A.K.M. Ramzy / 2021 ஜூலை 19 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

போபால்:
மத்திய பிரதேசத்திலுள்ள அமைச்சரவையிலுள்ள கலாசார துறை அமைச்சர் உஷா தாகூருடன் ‘செல்பி’ (புகைப்படம்) எடுக்க விரும்புவோர் கட்சியின் வளர்ச்சி நிதிக்கு ரூ.100 நன்கொடை அளிக்க வேண்டுமென திடுக்கிடும் செய்தியொன்று ஊடகங்களில் பரவியுள்ளது.
அதாவது, கலாசார துறை அமைச்சர் உஷா தாகூர், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் பலர் இவருடன் ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முண்டியடித்துக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, கண்ட்வா நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து கலாசார துறை அமைச்சர் உஷா தாகூர் கூறியதாவது:
ஆதரவாளர்கள் என்னுடன் செல்பி புகைப்படங்களை எடுப்பதில் நிறைய நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனால் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கால தாமதமாக கலந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. எனவே என்னுடன் செல்பி புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்கள் பா.ஜ.க.வின் உள்ளூர் மண்டல கருவூலத்தில் ரூ.100 முற்பணம் செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
13 minute ago
3 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
5 hours ago
8 hours ago