2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

பல்வேறு குற்றங்கள்; இருவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் 3,320 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலும் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். ஹம்ஸா, நேற்று (04) உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள், அக்கரைப்பற்று நீதிமன்றின் கட்டளைக்கமைய 07 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை செய்து வந்ததாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம்.எஸ்.பி. விஜயதுங்க தெரிவித்தார்.

சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது 3,320 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவர்களால் வழங்கப்பட்ட வாய்மொழி மூலத்துக்கமைய 25 பவுன் தங்க நகைகள் மற்றும் திருட்டுச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய ஓட்டோ, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் 03 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், ஆலையடிவேம்பு, கல்முனை மற்றும் காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, கரடியனாறு ஆகிய பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியால் செல்லும் பெண்களின் தங்க ஆபரணங்களை பறித்துச் செல்லுதல் போன்ற திருட்டுச் சம்பவங்களில் கடந்த 05 வருடங்களாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட தங்க நகைகளை அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை ஆகிய நகை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டதாக சந்தேக நபர்களின் வாக்குமூலத்துக்கமைய நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருக்குள் அடிமையானவர்களெனவும், இவர்கள் இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X