Niroshini / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், சுப்பிரமணியம் பாஸ்கரன்
தனுஷ்கோடி கடல் வழியாக, நாட்டுப்படகில், இலங்கை பெண் ஒருவரை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு, சட்டவிரோதமாக தப்ப முயன்ற, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி (வயது19) என்ற யுவதி, நேற்று (06) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம் சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போதுஇ தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் வைத்துஇ இந்திய கடலோர காவல்படையினரின் ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டிஇ குறித்த பெண்ணைஇ முதல் மணல் திட்டு பகுதியில்இ இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
குறித்த பெண்ணை, கைது செய்த மெரைன் பொலிஸார், இலங்கைக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மீனவர் முனீஸ்வரன், படகில் ஏற்றி சென்ற முனிராஜ், சிபிராஜ் மற்றும் சின்னபாலத்தை சேர்ந்த மீனவ பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், இன்று (07) காலை இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 19 வயதான முள்ளியவளை பெண் உட்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago