2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

சுகாதார ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

.எல்.எம்.ஷினாஸ்

மருதமுனை பிரதேச வைத்தியசலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள்,   வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (27) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கு கொவிட் கால கட்டத்தில் கடந்த 6ஆம், 7ஆம் மற்றும் 8ஆம் மாதங்கள் வழங்கப்பட்ட 7,500 ரூபாய் கொடுப்பனவு, ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதியோடு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இருக்கும் வரை இந்தக் கொடுப்பனவை தொடர்ந்து வழங்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவுகள், முறையான மேலங்கிகள், பாதுகாப்பான முகக்கவசம் மற்றும் கொவிட் விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படாமல் கவனயீனமாக அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இவற்றை தொடர்ந்து வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு, சுகாதார விதிமுறைகளை பின்பற்றி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, இன்று (27) காலை 07 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின் சேவைகள் தடைப்பட்டிருந்தன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X