2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

யானைகள் அட்டகாசம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். என். எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி வீட்டு குடியிருப்புகளை  நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தால் பிரதேசவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தினுல் இன்று (07) அதிகாலை யானைகளின் அட்டகாசத்தால் வீட்டு மதில்கள் மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது வீட்டில் தங்கியிருந்த மக்கள் உயிர் தப்பியுள்ளனர்.

மேலும், அயலிலுள்ள காடுகளுக்குள் இருந்து குறித்த கிரமங்களுக்குள் இரவு வேளைகளில் ஊடுருவும் காட்டு யானைகள், தமது சொத்துகளுக்கு பாரிய சேதம் விளைவித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

யானைகள் கூட்டம் வீட்டு மதிலை உடைத்து சேதம் விளைவித்ததோடு, பயன்தரும் பயிர்களையும் மரங்களையும் துவம்சம் செய்து சென்றுள்ளன.

காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதம் தொடர்பாக கிராம சேவையாளரிடமும் பொலிஸாரிடமும் கிராம மக்கள் அறிவித்துள்ளதாக தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .