2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

’இலவசமாக சடலங்களை ஏற்றுவோம்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம், கொரோனா காரணமான உயிரிழப்புகளுக்கு, உதவிகள் அற்ற நிலை காணப்படுமானால், இலவசமாக சடலங்களை எரியூட்டுவதற்கான போக்குவரத்து வசதியை வழங்கி வருவதாக, கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் முன்னாள் கல்விப் பணிப்பாளருமான க.முருகவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம் உயிரிழப்புகள் ஏற்படும் போது, பணம் வழங்கக் கூடியவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அமரர் ஊர்தியின் மூலம் சடலங்களை ஏற்றி இருக்கின்றது என்றார்.

'அதேநேரம் வசதியற்றவர்களுக்கு இலவசமாக சடலங்களை ஏற்றி இறக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதுடன், ஏனைய வசதிகள் சிலவற்றையும் மேற்கொண்டு வருகின்றது.

'கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மட்டுமல்ல மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கம் என்ற அடிப்படையில் ஏனைய வைத்தியசாலைகளில்; இருந்தும் சடலங்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

'தற்போதைய சூழல் சடலங்களை ஏற்றி இறக்குவதில் வசதியீனங்கள் காணப்படுமானால், கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்துடன் தொடர்பு கொள்ளவும்' எனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X