R.Maheshwary / 2021 செப்டெம்பர் 10 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருள்ஷான்
தெஹியோவிட்ட- இறைக்ட் தோட்டம் (சின்ன குரியானை) தோட்டத் தொழிலாளிகள் கடந்த இரண்டு நாள்களாக, பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், நேற்று (9) தோட்ட அதிகாரியின் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட அதிகாரி தமக்கு அதிகம் நெருக்கடிகள் தருவதாகவும் தோட்டத்தில் வேலை செய்யும் பொழுது தொழிலாளிகள், பாம்பு, குளவிக்கடிக்கு உள்ளானால் நிர்வாகம் , அன்று அரை நாள் சம்பளம் வழங்குவதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை செய்து தர தோட்ட நிர்வாகம் மறுத்து வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே ,குறித்த தோட்டத்தின் தற்போதைய தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago