2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

மலேரியா நுளம்பு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரிவுகளில் மலேரியா நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவு வைத்தியப் பொறுப்பதிகாரி டொக்டர் எம்.எம்.நௌஷாத், இன்று (11) தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் கிணறுகளின் நீரின் தரத்தை மதிப்பிடுவதற்கு பூச்சியல் ஆய்வு குழுவினால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, 500 கிணறுகளில் நீரின் தரத்தை பரிசோதித்து நீரின் தன்மைக்கேட்ப மீன் குஞ்சிகள் இடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மலேரியா பரப்பும் நுளம்பின் குடம்பிகள் பரவும் கிணறுகள் மற்றும் பாரிய நீர்தாங்கிகள் போன்றவற்றுக்கு பிராந்திய மலேரியா கட்டுப்பாட்டு பிரிவினர் மற்றும் பொதுப் பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து மீன் குஞ்சிகள் இடப்பட்டு வருவதாக கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை ஆரம்பித்துள்ளதால் பொதுவாக டெங்கு நுளம்பு பெருகும் இடங்களிலேயே மலேரியாவை பரப்பும் நுளம்பின் வாழ்விடமாகவும் அடையாளப்படுத்தப்பட்டள்ளது.

மலேரியா நோய் பரவலாகக் காணப்படும் நாடுகளுக்குச் செல்பவர்களாலும் அந்நாடுகளில் இருந்து வருபவர்களால் மலேரியா பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகிறது.

வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் காய்ச்சல் வந்தால் அருகிலுள்ள வைத்தியசாலையில் இலவசமாக மலேரியாவுக்கான பரிசோதனையைச் செய்துகொள்ள முடியுமென தெரிவித்தார்.

இதேவேளை, மலேரியா கட்டப்பாடு தொடர்பாக வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .