2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூர் கோழிப் பண்ணையாளர்கள் ஊக்குவிப்பு

Editorial   / 2022 ஜனவரி 13 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

உள்ளூர் கோழிப் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கோழிப் பண்ணையாளர்களுக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கைத்தொழில் ரீதியிலான செயலமர்வு, பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில், பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில்  நேற்று (12) நடைபெற்றது.

கோழிப் பண்ணையாளர்களின் முன்னேற்றத்துக்காக விஞ்ஞான தொழில்நுட்ப ஆலோசனைகள், வழிகாட்டல்கள், உற்பத்தி தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கான ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் கோழிப் பண்ணை தொடர்பான விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இப் பிரதேசத்தில் காணப்படும் உள்ளூர் கைத் தொழிலாளர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதனூடாக பொருளாதாரத்தை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாகவும், பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

கோழிப் பண்ணையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில், தொழில்நுட்பம் சார்ந்த ஆலேசனைகளை பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடம் வழங்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .