2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பிறந்து 20 நாள் மட்டுமே ஆன பச்சிளங்குழந்தை நெடுஞ்சாலையில்

Freelancer   / 2022 ஜூலை 03 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்வாலை ஊராட்சிக்கு உட்பட்ட பீமாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் (01) அதிகாலை 5 மணியளவில் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள ஒரு வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது.

அந்த வீட்டின் உரிமையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 4 மாதத்திற்கு முன்னர் சேம்பர் வேலைக்காக சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் பூட்டிய வீட்டின் முன்பு குழந்தையின் அழுகுரல் கேட்டதால் அந்த வீட்டின் அருகில் இருந்த முருகவேல் தனது மனைவி மகேஷ்வரியிடம் கூறியுள்ளார்.

இதன் பின்னர் குழந்தையை மகேஷ்வரி பார்த்தபோது பிறந்த 20 நாட்களே ஆன ஆண் குழந்தை என்று தெரிய வந்துள்ளது.

அந்த குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து கண்டாச்சிபுரம்  பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த பொலிஸார் குழந்தையை மீட்டு, விழுப்புரம் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் கனிமொழியிடம் ஒப்படைத்தனர்.

மேலும், குழந்தையை எடுத்து வந்து இந்த பகுதியில் வைத்தது யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .