2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

பத்தனை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு, நீர் வழங்கும் பத்தனை ஆற்றிலிருந்து, ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கொட்டகலை வூட்டன் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஏ.தங்கவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், கடந்த 9ம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த ஆணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நுவரெலியா நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின், சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .