2023 ஜூன் 07, புதன்கிழமை

சிறுமி உயிரிழப்பு; குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை

Ilango Bharathy   / 2023 மார்ச் 27 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி உயிரிழப்புக்குக் காரணமான நபருக்கு 100 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதித்து லூசியாணா நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் லூசியாணா மாகாணம் ஷிரேவ்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் லீ ஸ்மித். 35 வயதான இவர் கடந்த 2021ஆம்  ஆண்டு மார்ச் மாதம் மான்க்ஹவுஸ் ட்ரைவ் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அப்போது அதே ஹோட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவருக்கும், ஸ்மித்துக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஸ்மித் தன்னிடமிருந்த 9 எம்எம் ரக துப்பாக்கியால் அந்த நபரைச் சுட்டார்.

ஆனால் அந்த துப்பாக்கி குண்டு குறித்த ஹோட்டலின் உரிமையாளரின் 5 வயதான மகளின் மீது பாய்ந்தது. இவரது பெற்றோரான  விமல், ஸ்னேகா படேல் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  துப்பாக்கி குண்டால் காயமடைந்த சிறுமி 3  நாட்களின் பின் மார்ச் 21 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக லூசியாணா  பொலிஸார், வழக்குப் பதிவு செய்து ஸ்மித்தை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜான் டி மோஸ்லி, ஸ்மித்துக்கு 100 ஆண்டு சிறைத்தண்டனையை கடந்த வியாழக் கிழமை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குற்றவாளி ஸ்மித்துக்கு பரோல் மற்றும் தண்டனை குறைப்பு என எந்த சலுகையும் இல்லாத 60 ஆண்டு கடுங்காவல்சிறை தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவருக்கு எந்த சலுகையும் காட்டக்கூடாது என்று நீதிபதி ஜான் டி மோஸ்லி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .