Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மே 11 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற பொது மக்கள் மீது அரசாங்கம் குண்டர்களை ஏவி விட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும் என்று கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள், ஊழல், மோசடிகள் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
“வாழ்க்கைச் சுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் திண்டாடும் மக்கள், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அறவழிப் போராட்டங்கள் நடத்துவதை குண்டர் படை கொண்டு அடக்க முற்படுவதானது கோழைத்தனமான செயலாகும்.
“இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் ஜனநாயகம், மனித உரிமைகள், மத சுதந்திரம், சிறுபான்மையினரின் சமய மற்றும் கலாசார உரிமைகள் போன்றவற்றை மறுதலித்து அடக்குமுறைகளை கையாண்டதன் விளைவாகவே சர்வதேசம் இலங்கைக்கு உதவ முன்வராமல் கைவிரித்திருந்தது.
“இந்நிலையில் ஒட்டுமொத்த மக்களினதும் நியாயமான போராட்டங்களை அடக்கியொடுக்க முற்படுவதானது தற்போது சில நாடுகளிடமிருந்து கிடைத்து வருகின்ற மனிதாபிமான உதவிகளைக் கூட தடுத்து விடலாம்.
“அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படலாம். இவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு இறைவன் பாதுகாக்க வேண்டும். அதற்காக எல்லோரும் பிரார்த்திப்போம்” என்று மேயர் மேலும் தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago