2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

ஒருமாத மனைவிக்கு ஏணி கொடுத்த கணவன்

Editorial   / 2021 செப்டெம்பர் 24 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களின் விருப்பத்துக்கு மாறாக, திருமணம் முடித்துகொண்டமையால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குடும்பத்தினார், வீட்டின் சகல கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர்.

வீட்டுக்குள் நுழைவதற்கான சகல கதவுகளும் இழுத்து மூடப்பட்டிருந்தமையால், புதிய மனைவியுடன் வந்தவர், அந்த வீட்டில் தான் வசித்த மேல்மாடிக்குச் செல்வதற்காக நீண்டதொரு ஏணியை பயன்படுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அம்பாறை- உகன பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. இதுத்தொடர்பில் உகன பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நானும் என்னுடைய மனைவியும் வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கின்றோம். அங்குச் செல்வதற்கு வீட்டுக்கு வெளியே படிகள் இல்லை. நான், எனது மனைவியுடன் வீட்டுக்குச் சென்றவேளை, வீட்டின் சகல கதவுகளும் இழுத்து மூடப்பட்டிருந்தன.

தனது தந்தையும் சகோதரிகள் மூவருமே இவ்வாறு கதவுகளை இழுத்து மூடிவிட்டனர் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானும் தன்னுடைய மனைவியும் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு கதவுகளை திறந்து தருமாறும் அந்த முறைப்பாட்டின் ஊடாக அவ்விளைஞன் கோரியுள்ளான்.   

30 வயதான அந்த இளைஞன் வெளிநாட்டில் தொழில்புரிந்து வந்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் திருமணம் முடித்துள்ளார்.  

பேஸ்புக்கின் ஊடாக நண்பர்களாக பழகிய பதுளை யுவதியையே அவ்விளைஞன் திருமணம் முடித்துக்கொண்டுள்ளார். அத்திருமணத்துக்கு இளைஞனின் பெற்றோர், உறவினர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .