2023 ஜூன் 07, புதன்கிழமை

இந்திய முட்டையை எங்களுக்குத் தாருங்கள்

Freelancer   / 2023 மார்ச் 30 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மலையகத்தில் உள்ள ​பேக்கரிகளுக்கு விற்பனை செய்யுமாறு பேக்கரி உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியாவில் உள்ள பேக்கரிகளுக்கு, சதொச ஊடாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பேக்கரி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.

நாங்கள் சிறியளவிலேயே பேக்கரி உற்பத்திகளை செய்து வருகின்றோம். அதற்காக நாளொன்றுக்கு 300-500 முட்டைகள் மட்டுமே தேவைப்படுகின்றது.  

சந்தையில் தற்போது 55 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கூடிய விலைகளில் முட்டையை கொள்வனவு செய்து, பேக்கரி கைத்தொழிலை முன்னெடுக்க முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .