2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

சரக்கு ரயிலுடன் மோதிய கார்

Freelancer   / 2023 மே 08 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை நகரில் கார் ஒன்று , ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையில் கண்டியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளானது.

ஹப்புத்தளையில் இருந்து மொனராகலைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காரில் பயணத்த போது ஹப்புத்தளை நகர் பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வந்த சரக்கு ரயிலில் கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் காரில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. ரயில் கடவைக்கு அருகில் காவலில் இருக்கும் காவலாளி அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இல்லாமையே  இவ்விபத்துக்கான காரணம் என  ஹப்புத்தலை பொலிஸார் தெரிவித்தனர் .

காவலாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை  மேற்கொள்ள உள்ளதாக  ஹப்புத்தளை பொலிஸார்  தெரிவித்தனர்.

மேலதிக விபரங்களை ஹப்புத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .