2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

காட்டு யானைகள் அட்டகாசம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இன்று (12) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள், பல்வேறான சேதங்களை ஏற்படுத்தியதால், தாம் மிகுந்த அச்ச நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 6 மணியளவில் அக்கரைப்பற்று சிறிய அட்டாளைச்சேனை, சம்புநகர் ஆகிய பிரதேசங்களுக்குள் உட்புகுந்த காட்டு யானைகள் சில, அப்பிரதேசங்களில் இருந்த பயன்தரும் சுமார் 30க்கும் மேற்பட்ட தென்மை மரங்கள் மற்றும் மா மரங்கள் போன்றவற்றைத் துவம்சம் செய்துள்ளதுன.

இதுதவிர, மக்கள் குடியிருப்புகள் சிலவற்றுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வர்த்தக நிலையம் ஒன்றையும் பாரியளவில் உடைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் சுற்று மதிலை மூன்றாவது முறையாகவும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக பாடசாலைச் சமூகத்தினர் சுட்டிக்காட்டினர்.

காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாத்து தம்மை நிம்மதியாக வாழச் செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .