2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

R.Maheshwary   / 2022 நவம்பர் 27 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட தாய் ஒருவர், ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி- பெரலுகஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 65 வயது தாயொவருவரே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாய் தனது பிள்ளைகளுடன் சிவனொளிபாதமலைக்கு வருகைத் தந்திருந்த நிலையில், பிள்ளைகள் இவரை விட்டுச் சென்றதால் ஹட்டன் நகருக்கு தனியாக வந்து, காமினிபுரி பகுதியில் விழுந்து கிடந்த நிலையில், பிரதேசவாசிகளால் ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாய் பொலிஸாரிடம் வழங்கிய தகவலுக்கமைய, அவரது உறவினர்கள் குறித்து நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸா​ர் தெரிவித்தனர்.

இதுவரை இந்த தாயைப் பொறுப்பேற்க எவரும் வருகைத் தராத நிலையில், அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X