2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

ஹட்டன் சதொச விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எம்.கிருஸ்ணா

ஹட்டன்- மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் வேலை செய்யும்  ஊழியர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியானதையடுத்து குறித்த சதொச விற்பனை  நிலையம் 14 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.

அத்துடன், இங்கு பணிபுரிந்த 9 ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஹட்டன் நகரின் பிரதான சந்தைப்பகுதியிலுள்ள, மற்றுமொரு சதொச நிலையத்தில், பால்மாவைப் பெற்றுக்கொள்ள, நுகர்வோர் நீண்ட வரிசையில் நின்ற நிலையில், அனைவருக்கும் முறையாக பால் மா பக்கட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .