2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

’தலைவர் தின’ விசேட துஆப் பிரார்த்தனை

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 21ஆவது நினைவு தினத்தையொட்டி, கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஹரிஸின் கல்முனை மக்கள் பணிமனையில், இன்று (16)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தார், ஏ.சி.ஏ சத்தார்,எம்.எஸ் நிசார் (ஜேபி), ஏ.எம் பைறோஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களான தேசமாணிய ஏ.பி ஜெளபர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, மெளலவி.டி நெளபர் அமீன் (வாஹிதி), மெளலவி எம்.எம் ஜமாலுடின் (ஹாஸிமி) மற்றும்  கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மறைந்த பெருந் தலைவர் அஷ்ரஃப்பின் வாழ்க்கை வரலாறு பற்றி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோஸன் அக்தார், எம்.எஸ் நிஸார்(ஜே.பி), ஏ.சி.ஏ சத்தார் ஆகியோர்களால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன், மறைந்த தலைவர் அஸ்ரப்பின் மறுமைவாழ்வின் ஈடேற்றத்துக்காக விசேட துஆப் பிரார்த்தனையும் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X